Sunday, June 19, 2005

நினைப்பது 1

இவன் உருட்ட நினைப்பது நிறைய இருப்பதாலும், மனது வேகமாய் ஓடுவதாலும், அதை கட்டுப்படுத்தி நிறுத்துவது பெரும்பாடாய் இருப்பதாலும், தேர்ந்தெடுத்த தொழிலில் ஈடுபட நேரம் ஒதுக்க வேண்டி உள்ளதாலும், உருளும் உலகத்தை உற்று பார்த்து வியப்பதாலும் (வியர்ப்பதாலும் கூட!), எல்லாவற்றிற்கும் மேலாக unicode-இல் transliterate பண்ணுவது அவஸ்தையாய் படுவதாலும் வெகு நாளாக ஒத்தி வைத்த எழுத்தினை இன்று தொடர்கிறன்.

ஆச்சார்ய குருதேவ் இரவீந்த்ர நாத டாக்கூர் கூறுகிறார் -

" பலர் கவிஞனைப்போல் ' பறவை தன் மகிழ்ச்சிக்காக பாடுகிறது; அது போல எழுத்தாளனின் ரஸனையின் தீவிரமும் அவ்வாறே தனக்குள் எழுதுவதுதான். ரஸிகர்கள் அதனையே ஒட்டு கேட்கிறார்கள் ' என்று கூறுகிறார்கள். பறவையின் இசையில் பறவை கேட்போற்க்கு விடும் குறிப்பு ஏதும் இராது என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் எழுத்தாளனுடைய முக்கிய ல௯ஷியம் படிப்பவர் குழாம்தான். எரியாத கட்டையை தீயென்று கூறுவது எவ்வாறோ, அவ்வாறே தான் வானை நோக்கியவாறு வானத்தினைப்போலவே வாய் மூடி மௌனியாக நிற்பவனை கவிஞன் என்று சொல்வதும் ஆகும். மனத்தின் அடிப்புரையில் என்ன இருக்கிறது, இல்லை என்பதை ஆராய்வதில் வெளி மக்களுக்கு ஒரு வித லாபமோ, நஷ்டமோ இல்லை. பேச்சில் 'மிஷ்டான்னம் இதரே ஜனா: ' (மற்றவர்க்கு இனிப்பு) என்று கூறுவது போல, உள்ளே உக்ராண அறையில் என்ன குவிந்துள்ளது என்று கணக்கு பார்ப்பதில் அவர்க்கு ஒரு வித த்ருப்தியும் இல்லை. அவர்களுக்கு கைமேல் இனிப்பு வகைகள் கிடைக்க வேண்டியது ஒன்றே குறிக்கோள் "
ஆதலால், இனிப்பு மெதுவாக வழங்கப்படும். வேண்டியவர்கள் வேண்டும்போது எடுத்துச்செல்ல வேண்டியது ! இவன் கை மற்றும் கண் வைத்த எல்லா நல்விஷயங்களும் உருட்டி இனிப்பாக்க ஆசைதான். என்றாலும் . . .
நம் தமிழர்க்கு முன்பிருந்த நல்லிலக்கிய மற்றும் கலை ரஸனையை தக்க வைத்துக்கொள்ள ஆவல் இருப்பதால் பெரும்பாலும் இவன் படிக்கும், உணரும் பிற மொழி படைப்புகளை இனிப்பாய் வழங்க இங்கே முயற்சி எடுக்கிறன். தம்மொழியில் அவ்வபோது இவன் ஸ்லாகிக்கும் படைப்பு பூக்கள் பல உள்ளதை மறுக்க முடியாதெனினும் ஸ்வாரஸ்யம் கருதி இவன் நுகர்ந்த, நுகரும் மாற்றான் தோட்டத்து மல்லிகைப்பூக்களை தொடுக்கிறன்.
இது போக இவனின் அவனியில் தொழில் விஷயமாக சந்திக்கும் பாத்திரங்களையும் அநுபவங்களையும் முன் வைக்க ஆவல் என்பதாலும் பைய உருட்டுகிறேன்.

போற்றுவார் தத்தம் அவனிகளை இவனுக்கு அறிமுகம் செய்யவேணும் - தூற்றுவோர் இருப்பின் அமைதியாக புன்சிரிக்கலாம் - அதிக பட்சம் 'இனிய உளவாகலாம்'.

ஓ எத்தனை உண்டு உருட்ட..!

Thursday, April 28, 2005

உணரும் உலகத்தை unicode-இல் உருட்டும் முயற்சி..

அதே அதே